ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் படம், தக் லைஃப் நடிகர் கமல்ஹாசன், ஜெயம் ரவி, த்ரிஷா, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர். ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தை மணிரத்னம் எழுதி இயக்குகிறார்.

#maniratnam #ulaganayagan #arrahman  #simbu #thuglife #kamalhasan #gautamkarthik #jayamravi #dulquersalmaan

இதன்மூலம், தக் லைஃப் படத்தின்மூலம் 36 ஆண்டுகளுக்குப் பின், கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணி மீண்டும் ஒன்றுசேர்ந்துள்ளது, இந்திய அளவில் மிகப்பெரிய கவனத்தை ஈர்க்கிறது. ஏனெனில், மும்பையில் கோலோச்சிய தாதா வரதராஜ முதலியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, 1987ஆம் ஆண்டு உருவாக்கிய ‘நாயகன்’ திரைப்படம் உலகளவில் கல்ட் ஃபிலிமாக இருந்துவருகிறது.


மேலும், டைம் வார இதழ் மற்றும் சிஎன்என் மற்றும் ஐபிஎன் நிறுவனம், குறிப்பிட்ட உலகின் நூறு சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக, நாயகன் படத்தைக் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது. இதனால், கமல்ஹாசன் மற்றும் மணி ரத்னம் மீண்டும் இணைந்து உருவாகவுள்ள ‘தக் லைஃப்’படத்துக்கும் மிகப்பெரிய வரவேற்பு உலகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



#maniratnam #ulaganayagan #arrahman 

#simbu #thuglife #kamalhasan #gautamkarthik #jayamravi #dulquersalmaan