திரிஷா இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடிக்கின்றார். திரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வருகின்றார். அவரது தீவிர ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொலிந்து வருகின்றனர். தற்போது எவர்கிரீன் நடிகையாக வலம் வரும் திரிஷாவின் சொத்து மதிப்பு விவரம் வைரலாகி வருகிறது.

#Trishabirthday #Trishamovies #96 #mounampesiyathe #Ghilli  #ennaku20unnaku18 #trishakrishnan #ponniyinselvan2


திரிஷா தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக டாப் நாயகியாக வருகின்றார். இவர் முதல் முதலில் கடந்த 1999 ஆம் ஆண்டு பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். இந்த திரைப்படத்திற்கு பிறகு கடந்த 2000 ஆம் ஆண்டு ரிலீஸான சூர்யாவின் மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் ஹீரோயாக அறிமுகமார். இதே ஆண்டில் பல ஹிட் படங்களை கொடுத்து அனைவரின் கனவுக்கன்னியாக மாறினார். இதையடுத்து எல்லாமே இவருக்கு ஏற்றம்தான். அதுவும் 40 வயதிலும் பிசியாக முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வரும் ஒரே கதாநாயகி நடிகர் த்ரிஷா ஆவார்.