ஓ.டி.டி தளங்கள்வந்த பிறகு, இந்த தளங்களில் படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இதனால், வாரத்திற்கு ஒரு முறை தியேட்டரில் படம் வெளியிடுவது போல், ஓ.டி.டி தளங்களிலும் படங்கள் வெளியிடப்படுகிறது.
இந்த வாரம், 14 ஆண்டுகளுக்குப் பின்னர் திரையில் மீண்டும் கம்பேக் கொடுத்த வெள்ளி விழா நாயகன் மோகன் நடித்த 'ஹரா' படம் இரண்டு ஓ.டி.டி தளங்களில் ஸ்ட்ரீம் ஆகிறது. அவை என்னென்ன தளங்கள் என்று பார்க்கலாம்.
சினிமா ரசிகர்கள் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க விரும்பினாலும், ஓ.டி.டி தளங்களில் படம் வெளியான பின்னரும் அந்தப் படத்தை மீண்டும் பார்த்து விவாதிக்கின்றனர். தியேட்டரில் படம் பார்க்க தவறவிட்டவர்களுக்கு ஓ.டி.டி தளங்கள் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளன. இதனால், ஓ.டி.டி தளங்களில் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதேபோல், ஓ.டி.டி தளங்கள் நல்ல லாபம் தருவதால் உலகம் முழுவதும் பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரை பல ஓ.டி.டி தளங்கள் வந்துவிட்டன. இதனால், தயாரிப்பு நிறுவனங்கள் ஒரு படத்தின் ஓ.டி.டி உரிமத்தை ஒரு தளத்திற்கு விற்பனை செய்ய முடியாவிட்டாலும், மற்றொரு தளத்திற்கு விற்க முடிகிறது. மேலும், தியேட்டரில் வெற்றி பெறாத படங்களும் ஓ.டி.டி தளங்களில் வெளியானபோது நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.
வெள்ளி விழா நாயகன் மோகன், 14 ஆண்டுகளுக்குப் பின்னர் திரைக்கு வந்த 'ஹரா' படத்தில் நடித்துள்ளார். 80களில் காதல் மன்னனாக இருந்த மோகன், பெண்களின் ஆதரவால் வெள்ளி விழா நாயகனாக பிரபலமானார். 'ஹரா' படம் அப்பா-மகள் பாசத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட, குடும்பகதை சார்ந்த ஆக்ஷன் படமாகும்.
இப்படத்தில் மோகன் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். படம் தியேட்டரில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
'ஹரா' படத்தை இயக்கியவர் விஜய் ஸ்ரீ. ஜூன் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம், இன்று ஜூலை 5 ஆம் தேதி அமேசான் பிரைம் மற்றும் ஆஹா தமிழ் ஓ.டி.டி தளங்களில் ஸ்ட்ரீம் ஆகிறது. இரண்டு ஓ.டி.டி தளங்களும் படத்தை வாங்கியதால் படக்குழு மகிழ்ச்சியாக உள்ளது.
மேலும் படிக்க :
லண்டனில் தேசிய விருது வென்ற கேப்டன் மில்லர் | சிறந்த அயல் மொழி திரைப்பட விருது
0 கருத்துகள்