#Coolie 🔥

ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாக உள்ள படம் கூலி . நாளை ஹைதராபாத்தில் படப்பிடிப்பை தொடங்குகிறார்கள். படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் இருக்கும், மேலும் இந்த படத்தில் ரஜினி கெட்டவனாக நடிப்பார் என்று லோகேஷ் கனகராஜ் முன்பே குறிப்பிட்டிருந்தார்.


நாளை ஹைதராபாத்தில்  படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளதால் இங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளார் ரஜினிகாந்த். இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும்.


கூலி படத்தின் படப்பிடிப்பு முன்னதாகவே தொடங்குவதாக இருந்தது ஆனால் தாமதமாகி கொண்டே வந்தது. இறுதியாக, நாளை ஹைதராபாத்தில் சிறப்பு விழாவுடன் படப்பிடிப்பை தொடங்குகிறார்கள். இப்படத்தில் ரஜினிகாந்துடன் ,ஸ்ருதிஹாசன் மற்றும் சத்யராஜ் நடிக்கவுள்ளார். மற்ற நடிகர்கள் யார் என்பதை லோகேஷ் விரைவில் அறிவிப்பார்.


சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில், அனிருத் இசையமைக்கிறார். இதற்கு முன்பு லோகேஷ் உடன் இணைந்து மிரட்டியிருந்த  கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். சதீஷ் குமார் செட் வடிவமைக்க, பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, அன்பரிவ் மாஸ்டர் சண்டைக்காட்சிகளை உருவாக்குகிறார். படத்தில் பல பரபரப்பான ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கும்.


முன்னதாக படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் ப்ரோமோ ஆகியவை வெளியாகி மிகப்பெரிய அளவில் மாஸ் காட்டியது. இந்த படத்தில் ரஜினிகாந்த் நெகட்டிவ் ஷேடில் நடிக்க உள்ளதாக முன்னதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். 

Rajinikanth new movie Lokesh Kanagaraj Rajinikanth Kooli movie shooting Hyderabad film shoot Rajinikanth negative role Shruti Haasan in Kooli South Indian action movies Tamil cinema updates


கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ரஜினியின் லுக் டெஸ்ட் ஓவர் என்றும் புகைப்படத்துடன் தெரிவித்திருந்தார். இதையடுத்து படத்திற்கான எதிர்பாப்பு மிகப்பெரிய அளவில் காணப்படுகிறது. தன்னுடைய முந்தைய படங்கள் போல இல்லாமல் இந்த படத்தில் போதை கலாச்சாரங்கள் ஆகியவை இடம்பெறாது என்று லோகேஷ் கனகராஜ் உறுதிப்பட கூறியிருந்தார்.


இந்நிலையில் கூலி படம் எது போன்ற கதைக்களத்தில் பயணிக்கும் என்பது குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது டி.ஜே .ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த், அந்த படத்தின் டப்பிங் வேலைகளை நிறைவு செய்யவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அவர் கூலி படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார். படத்தின் அடுத்தடுத்த சூட்டிங்கை சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் மட்டுமே லோகேஷ் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.



மேலும் படிக்க :

எந்திரன்  படத்தை தவறவிட்ட கமல் ஹாசன்.. வாய்ப்பை பயன்படுத்தி வென்ற ரஜினிகாந்த்