ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து முடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி வெளிவரவுள்ளது. மக்கள் உண்மையிலேயே படத்தைப் பார்க்க ஆர்வமாக உள்ளனர், கமல்ஹாசன் எந்திரன்  படத்தில்லிருந்து  விலகியதற்கான காரணம் குறித்து கமல் ஹாசன் ஓப்பனாக பேசியிருப்பது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

Kamal Haasan - எந்திரன் படத்தில் இருந்து விலகிய கமல் ஹாசன்



தொடர்ந்து பிஸியாக நடித்துவந்த கமல்ஹாசன்  மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி தொடங்கி அரசியல்லில் கவனம் செலுத்தினார். ஆனால்,  கமல் நினைத்தது போல் அரசியலில் அவர் சிறப்பாக செயல்படமுடியவில்லை. திரைப்படங்களில் நடிக்கத் திரும்பிய அவர் மீண்டும் விக்ரம் படத்தில் நடித்தார்.


படம் மெகா ஹிட்டானதை அடுத்து,நின்றுபோன இந்தியன் 2 படத்தின் பணிகளும் தூசு தட்டப்பட்டன. ஏற்கனவே 2019ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தால் இந்தியன் 2 ஷூட்டிங் நின்று போயிருந்தது குறிப்பிடத்தக்கது. விக்ரம் கொடுத்த வெற்றியின் உற்சாகத்தால் இந்தியன் 2வில் நடிக்க ஆரம்பித்தார். ஷங்கரும் முழுமூச்சாக இறங்கி வேலை செய்தார். இதில் கமலுடன் சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.


எந்திரன்: இதற்கிடையே ரஜினிகாந்த்தை வைத்து ஷங்கர் இயக்கிய எந்திரன் படத்தில் முதலில் கமல் ஹாசன் நடிக்க வேண்டியது. படத்துக்கு ரோபோ என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. அவருக்கு ஜோடியாக ப்ரீத்தி ஜிந்தா நடிப்பதாக இருந்தது. அதற்கான ஃபோடோஷூட்டும் நடத்தப்பட்டது. ஆனால் சில காரணங்களால் கமல் ஹாசன் அந்தப் படத்திலிருந்து வெளியேற; ரஜினிகாந்த்தை வைத்து எந்திரன் படத்தை இயக்கி மெகா ஹிட்டடித்தார் ஷங்கர். 


கமல் ஹாசன் சொன்ன காரணம்: இந்நிலையில் ரோபோ (எந்திரன்) படத்திலிருந்து தான் ஏன் விலகினேன் என்பது குறித்து கமல் ஹாசன் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அவர் இதுகுறித்து கூறுகையில், "எந்திரன் படத்தில் நடிக்க முதலில் ஷங்கர் என்னை அணுகினார். ஆனால் அப்போது கால்ஷீட், அப்போதைய மார்க்கெட், சம்பளம் போன்ற காரணங்களால் நான் விலகிவிட்டேன். அதனையடுத்து அந்தப் படத்தை ஷங்கர் விட்டுவிடுவார் என்றுதான் நினைத்தேன். ஆனால் ரஜினியை வைத்து எடுத்து மிகப்பெரிய ஹிட்டை கொடுத்துவிட்டார்" என்றார். முன்னதாக இந்தியன் படத்தின் கதையில் முதலில் ரஜினிகாந்த் நடிக்க வேண்டியதிருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க :

இந்தியன் 2 படத்தின் ட்ரெயிலர் உலக நாயகன் கமல் ஹாசனின் மாஸ் பேச்சு