இந்த வருடம் பொங்கலுக்கு வெளியான படம் கேப்டன் மில்லர். இதில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் தனுஷ் நடிப்பில். அருண் மாதேஸ்வரன் இயக்கிய இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
இப்படத்திற்கு இசையமைத்தவர் ஜீவி பிரகாஷ் குமார். பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், நிவேதிதா சதீஷ் என பல பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட காலத்தில் நடக்கும் கதை இது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாக ரசித்துள்ளது. 50 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது
லண்டனில் நடந்த ஒரு பெரிய திரைப்பட விழாவில் கேப்டன் மில்லர் திரைப்படம் சிறப்பு விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன், இந்த ஆண்டின் சிறந்த பிறமொழிப் படத்துக்கான விருதைப் பெற்றதாக சமூக வலைதளங்களில் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
திரைப்பட விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த படங்கள் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டன. சிறந்த வெளிநாட்டு படத்திற்கான விருதை இந்தியாவைச் சேர்ந்த "கேப்டன் மில்லர்" திரைப்படம் வென்றது. இந்த விருதை படக்குழு சார்பில் படத்தின் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஏற்றுக்கொண்டார்.
மேலும் படிக்க :
விரைவில் 'தங்கலான்' டிரைலர் அப்டேட் கொடுத்த GV.பிரகாஷ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் டிரைலர்
0 கருத்துகள்