| #சீயான் #தங்கலான் |
நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் படத்தில் நடித்திருக்கிறார். பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் அந்தப் படம் முதலில் ஜனவரி மாதம் ரிலீஸாகவிருந்தது. ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் விக்ரமுக்கு ஒரு மெகா ஹிட் படமாக அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆகஸ்ட் 15 ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கும் சூழலில் தங்கலான் குறித்து ஜிவி பிரகாஷ் ட்வீட் செய்திருக்கிறார்.
சினிமாவில் ஏகப்பட்ட கஷ்டங்களை கடந்தவர் நடிகர் விக்ரம். இப்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவரது மகன் துருவ் விக்ரமும் சினிமாவில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.
பாலாவின் முதல் படமான சேதுவில் நடித்தார் விக்ரம். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக ஆனது. இதனால் சினிமாவில் விக்ரம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டார்.
சேது படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு விக்ரமுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இருப்பினும் எல்லா கதைகளிலும் நடிக்காமல் தன்னை நிரூபிக்கும் வகையில் உருவாகியிருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார்.
ஒரு பக்கம் காசி, பிதாமகன் என நடிப்புக்கு தீனி போடும் படங்களிலும், மறுபக்கம் ஜெமினி, தூள், தில் என கமர்ஷியலுக்கு தீனி போடும் படங்களில் நடித்து இரட்டை குதிரையில் லாவகமாக பயணித்தார். இதனால் கரியரின் உச்சத்திற்கு சென்று இப்போது மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.
விரைவில் ரிலீஸ்: முதலில் 'தங்கலான்' படம் ஜனவரியில் ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் தற்போது ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்பவும் படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மேக்கிங் வீடியோ: விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட மேக்கிங் வீடியோவும் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது. அதனைப் பார்த்த ரசிகர்கள்; விக்ரம் எத்தனையோ படங்களுக்கு வெறித்தனமாக உழைத்திருக்கிறார். ஆனால் தங்கலானில் அவரது உழைப்பை பார்க்கும்போது கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டடிக்க வேண்டும் என்று தோன்றுவதாக கமெண்ட்ஸ் செய்தனர்.
ஜிவி பிரகாஷ் ட்வீட்:
தங்கலான் படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் அவர் படம் குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில், 'தங்கலான்' படத்துக்கான பின்னணி இசை பணிகள் முடிந்துவிட்டன. என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக இந்தப் படத்துக்கு பின்னணி இசையை கொடுத்திருக்கிறேன். இது என்ன மாதிரியான திரைப்படம்!.. படத்தை பார்க்க ஆவலோடு காத்திருக்கிறேன். வெறித்தனமான ட்ரெய்லர் மிக விரைவில் வெளியாகவிருக்கிறது. அதை பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். தங்கலான் திரைப்படம் இந்திய சினிமாவின் பெருமைக்குரிய படமாக இருக்கும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்
இதற்கிடையே தங்கலான் படத்தை முடித்திருக்கும் விக்ரம் அடுத்ததாக சித்தா படத்தின் இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் என்ற படத்தில் நடிக்கிறார்.
இதற்கும் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இதன் டைட்டில் டீசர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கண்டிப்பாக இந்தப் படம் கமர்ஷியல் ரீதியாக விக்ரமுக்கு கம்பேக்காக அமையும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.
மேலும் படிக்க :
எந்திரன் படத்தை தவறவிட்ட கமல் ஹாசன்.. வாய்ப்பை பயன்படுத்தி வென்ற ரஜினிகாந்த்

0 கருத்துகள்