![]() |
| #Raayan |
இது தனுஷின் 50வது படம் என்பதால் பிரமாண்டமாக விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர தனுஷை வைத்து படம் எடுத்த இயக்குனர்களுக்கு பாராட்டு தெரிவிக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ், நடிப்பையும் தாண்டி பின்னணிப் பாடகராகவும், பாடலாசிரியராகவும், ப. பாண்டி படத்தின் மூலம் இயக்குனராகவும் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர்
இப்படத்தில் துஷாரா விஜயன், அக்கினேனி நாகார்ஜுனா, எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், பிரகாஷ்ராஜ், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன், அரவிந்த் ஆகாஷ், ஜெயராம், நந்தா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படம் தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ராயன் படத்திற்காக தனுஷ் மொட்டை அடித்தார். மேலும் சந்தீப் கிஷன் மற்றும் காளிதாஸ் ஜெயராம் உடனான அவரது முதல் போஸ்டரும் வைரலானது.
![]() |
| #dhanush |
ஏ.ஆர்.ரகுமான் இசையில் தனுஷ் பாடிய முதல் பாடல் 'அடங்காத அசுரன்' மே 9ஆம் தேதி வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தது.
பெரிய கொண்டாட்டம்
ஜூன் 1ம் தேதி ராயன் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.இந்த விழாவில் தனுஷ் படத்தை இயக்கிய இயக்குனர்கள் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. ராயன் படம் ஜூன் 13ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


0 கருத்துகள்