#நாகார்ஜுனா #சொத்துமதிப்பு #தெலுங்குநடிகர் #இந்தியசினிமா #சினிமா

தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் நடிகர் நாகார்ஜுனா. 64 வயதிலும் இளமையாக இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் நடித்து வருகிறார். 

1984ஆம் ஆண்டு லட்சுமி டகுபதி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நாகசைதன்யா எனும் மகன் பிறந்தார். பின் 1990ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இதன்பின் 1992ஆம் ஆண்டு நடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பிறந்தவர் தான் அகில். நாகார்ஜுனாவின் இரண்டு மகன்களும் சினிமாவில் நடிகர்களாக இருக்கிறார்கள்.

சொத்து மதிப்பு 

இந்த நிலையில் நாகார்ஜுனாவின் தற்போதைய சொத்து மதிப்பு 3,010 கோடி ரூபாய் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தில் நாகார்ஜுனா சொந்தமான ரூ. 45 கோடி மதிப்புள்ள பங்களா இருக்கிறதாம். மேலும் இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 9 கோடி முதல் ரூ. 20 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என சொல்லப்படுகிறது 

மேலும் படிக்க :

விரைவில் 'தங்கலான்' டிரைலர் அப்டேட் கொடுத்த GV.பிரகாஷ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் டிரைலர்