ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற “மூக்குத்தி அம்மன்” படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக தகவல்.
வானொலி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் பெயர் பெற்ற ஆர்.ஜே.பாலாஜிக்கு தனக்கென தனி ரசிகர்கள் உள்ளனர். வானொலியில் பிரபலமான பிறகு, நகைச்சுவை நடிகராக திரைப்படங்களில் நுழைய முடிவு செய்தார்.
நானும் ரௌடிதான் படத்தில் விஜய் சேதுபதியுடன் அவர் நடித்த அலப்பறையைப் பார்த்து சிரிக்காதவர்கள் இருக்க முடியாது.
ஒரு கட்டத்தில் ஆர்.ஜே. பாலாஜி நகைச்சுவை வேடங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு ஹீரோவானார். அவர் ஹீரோவாக நடித்த எல்.கே.ஜி படம் மாபெரும் வெற்றி பெற்றது,
அதைத் தொடர்ந்து மூக்குத்திஅம்மன், வீட்ல விசேஷம் , போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தது மட்டுமின்றி இணை இயக்குனராகவும் பணியாற்றி இருந்தார் . மூக்குத்தி அம்மன் நேரடியாக ott _இல் வெளியானது.
நயன்தாரா அம்மன் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்தார், இது rj பாலாஜியின் நகைச்சுவையான படம், உடனடியாக அனைவரையும் கவர்ந்தது.
இருந்தாலும் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க போவதாக பாலாஜி அறிவித்தார், அம்மன் இரண்டாம் பாகத்தில் நடிக்க நயன்தாரா மறுத்துவிட்டதாகவும், அதற்கு பதிலாக த்ரிஷா கதாநாயகியாக நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
ஆனால் தற்போது மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும், இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இரண்டாம் பாகத்தில் நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த உள்ளார்.
மேலும் படிக்க :
லண்டனில் தேசிய விருது வென்ற கேப்டன் மில்லர் | சிறந்த அயல் மொழி திரைப்பட விருது
0 கருத்துகள்