லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபகாலமாக வேறு படங்களை விளம்பரப்படுத்துவதில்லை, ஆனால் நேற்று இரவு வெளியான நேசிப்பாயா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு அவரது ரசிகர்களையும் திரையுலகினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
நடிகர் முரளியின் பெரிய மகன் அதர்வா நீண்ட நாட்களாக சினிமாவில் நடித்து வருகிறார். தற்போது தனது தம்பியை ஒரு படத்தில் ஹீரோவாக்க உதவி செய்து வருகிறார். அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி ஹீரோவாக நடிக்கும் நேசிப்பாயா படத்தின் நிகழ்ச்சிகள் தான் நடிகை நயன்தாரா பங்கேற்றுள்ளார்.
அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன், சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ்ப் படங்களில் இயக்குகிறார். இப்படத்தில் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளார்.
நடிகர் ஆர்யாவும் கலந்து கொண்டது ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ராஜா ராணி கூட்டணி என்றால் நயன்தாராவும் ஆர்யாவும் இணைந்து ராஜா ராணி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஆரம்பம் போன்ற படங்களில் நடித்துள்ளனர்.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நயன்தாரா ,ஆகாஷ் முரளி அறிமுகம் செய்து வைத்து பேசியபோது சினிமா புரோமோஷனல் பெரிதாக கலந்து கொள்வதில்லை. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தது விஷ்ணுவர்தன் சார் அவர் இயக்கத்தில் பில்லா மற்றும் ஆரம்பம் படத்தில் நடித்துள்ளேன். அதையும் தாண்டி அவர் நல்ல நண்பர், இந்த டீம் மொத்தமே நண்பர்களாக உள்ள நிலையில், நட்புக்காக வந்தேன் என விளக்கம் கொடுத்துள்ளார்.
மேலும் படிக்க :
இந்தியன் 2 படத்தின் ட்ரெயிலர் உலக நாயகன் கமல் ஹாசனின் மாஸ் பேச்சு
0 கருத்துகள்