தளபதி விஜய் GOAT படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், விஜய்யின் அடுத்த படம் குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.
| #Thalapathy69 |
தளபதி 69 விஜய்யின் கடைசி படம் என்று கூறப்படுகிறது. இயக்குனர் எச்.வினோத் இயக்குனராக இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.
இந்நிலையில் தளபதி 69 படத்திற்கு விஜய் பெறும் சம்பள தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் விஜய் ரூ. 275 கோடி சம்பளம் பெறுவதாக பிரபல திரைப்பட விமர்சகர் அபிஷேக் ராஜா அறிவித்துள்ளார். எனினும் இது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.
சமூக வலைதளங்களிலும் இது குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தளபதி 69 ரத்து செய்யப்படுவதாக வதந்திகள் பரவிய நிலையில், அது வெறும் வதந்தி என தற்போது தெரியவந்துள்ளது.
இதன் பிறகு விஜய் படத்துக்கு வாங்கும் சம்பளம் குறித்து திரையுலக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
0 கருத்துகள்