Tamil Cinema Makkal  Tamil Cinema News  Tamil Movie News Online Tamil Cinema News - சினிமா செய்திகள்Breaking Tamil News  Today Tamil Cinema  Cinema News  Latest Tamil Cinema  Tamil Gossips  Tamil Actor  Tamil Movies  Tamil Cinema News  சினிமா செய்திகள்  தமிழ் சினிமா  தமிழ் படங்கள்  Tamil Cinema News  Tamil Movie News  Tamil Cinema Reviews  Tamil Movie Reviews  Kollywood


சென்னை : சிவகார்த்திகேயன்  கடைசியாக நடித்த பிரின்ஸ் படம் சரியாக வராததால் சோகத்தில் இருந்த சிவகார்த்திகேயன் தற்போது அயலான் ஹிட் ஆனதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 


சிவகார்த்திகேயன் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். தேர்ந்தெடுக்கும் கதைகள் கமர்ஷியலாக இருப்பதால் சிறுவர், சிறுமிகள் மத்தியில் அவருக்கு நல்ல கிரேஸ் உண்டு. அதேபோல் குடும்பத்தினரும் சிவகார்த்திகேயன் படங்களை விரும்பி பார்க்கின்றனர். 


விஜய்யும் இப்போது சினிமாவிலிருந்து ஒதுங்கவிருப்பதால் கண்டிப்பாக அவர் இடத்தை சிவகார்த்திகேயன் ரீப்ளேஸ் செய்வார் என்று சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கின்றனர். 


அவரது நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது.


சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். 


இந்திய ராணுவ வீரர் முகுந்த வரதராஜனின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி வரும் இப்படம் இறுதிக்கட்ட தயாரிப்பில் உள்ளது. 


சில மாதங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயனின் பிறந்தநாளில் டீசர், போஸ்டர்கள் மற்றும் இதர அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. அமரன் திரைப்படம் ஏறக்குறைய முடிந்துவிட்டது, 


இந்நிலையில் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி அமரன் படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக கூறப்படுகிறது. 


மிகப்பெரிய தொகையை கொடுத்து படத்தை வாங்கியிருக்கிறதாம். முன்னதாக அந்த நிறுவனம்தான் விடாமுயற்சி, குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களையும் வாங்கியிருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.


 #amaran #sk21 #sivakarthikeyan #rajkumarperiasamy #rkfi #amaranteaser