இப்படத்தில் ஸ்ருதிஹாசன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
முன்னணி கன்னட நடிகர் உபேந்திரா, கன்னட நடிகை ரசிதா ராம், நடிகர் அமீர்கான் ஆகியோர் கூலி படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கூலி படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களை ஒவ்வொன்றாக அறிமுகம் செய்வதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று அறிவித்தார்.
மலையாள நடிகர் சவுபின் சாஹிர் கூலி படத்தில் இணைந்துள்ளதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற மஞ்சுமேல் பாய்ஸ் படத்தில் இவர் முக்கிய வேடத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க நடிகர் விஜய் வாங்கிய புதிய LEXUS சொகுசு கார்
0 கருத்துகள்