இசைஞானி இளையராஜா தனுஷ் கமல் ஹாசன் அருண் மாதேஸ்வரன் மெர்குரி மூவிஸ் தமிழ் சினிமா பயோபிக் இசை வரலாறு உலக இசை



இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாகவிருக்கிறது. உலகம் முழுவதும் தனது இசையால் மனிதர்களை கவர்ந்திழுக்கி வந்த அவர், தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த சவால்களை இந்த பயோபிக் மூலம் ரசிகர்கள் பார்க்க மிக்க ஆர்வமாக உள்ளனர்.

 இளையராஜாவாக தனுஷ் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேடையில், வாசிப்பாளராக மட்டுமின்றி பல நாடகங்களில் நடிக்கவும் செய்துள்ளார் இளையராஜா. பணம் இல்லாததால் வாத்தியங்கள் வாங்க முடியாத நிலையில், பூட்டுக்களை வைத்து இசையமைத்தார். அவருடைய இசை, வாழ்க்கையின் அனுபவங்களில் இருந்து வெளிப்பட்டது. இதனால் தான் இளையராஜா இன்றும் மக்கள் மனதில் ராஜாவாக திகழ்கிறார்.


சினிமாவுக்குள் நுழைந்த முதல் படத்திலேயே தமிழ்நாட்டின் கவனத்தை ஈர்த்தாலும், கடுமையான போராட்டங்களை சந்திக்க வேண்டியிருந்தது. அவர்மீது நடத்திய தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் சினிமாவில் இருந்து அவரை ஒழிக்க முயன்றவர்களின் செயல்கள் அனைத்தையும் தாண்டி, தனது திறமையால் இன்று வரை உச்சத்தில் உள்ளார். 

இளையராஜாவின் திறமை மற்றும் உண்மையான இசைப்பற்று அவரை இன்றும் திரையுலகில் ராஜாவாக வைத்துள்ளது.


அவரது இசையில் அடுத்ததாக வரும் படங்களில் 'விடுதலை' படத்தின் இரண்டாவது பாகம் உள்ளிட்ட பல படங்கள் உள்ளன. 

இன்றைய சூழலில், இளையராஜாவின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்படும் என்று சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. மெர்குரி மூவிஸ் நிறுவனம் இதை தயாரிக்கவிருக்கிறது. இளையராஜாவாக தனுஷ் நடிக்கவிருப்பதும், அருண் மாதேஸ்வரன் இயக்க கமல் ஹாசன் திரைக்கதை எழுதவிருப்பதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


சென்னையில் அண்மையில் நடைபெற்ற இசை கச்சேரியில், ரசிகர்களிடம் பயோபிக் குறித்து இளையராஜா பேசினார். "சில பாடல்கள் உருவானது பற்றி நான் சொல்வதால் கிளாஸ் எடுக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். என்னுடைய பயோபிக் உருவாகவிருக்கிறது. சில விஷயங்களை நான் பகிர்ந்திருக்கிறேன்.அதெல்லாம் அந்தப் படத்தில் வருமா என்று தெரியவில்லை. 

என்னைப் பற்றி முழுமையாக தெரிந்துகொண்டு நீங்கள் சந்தோஷப்பட்டால்தானே எனக்கு சந்தோஷமாக இருக்கும். அனைத்தையும் எனது மனதில் வைத்து நான் என்ன செய்யப்போகிறேன்" என்று உணர்ச்சிகரமாக கூறினார்.


மேலும் படிக்க :

Kaithi 2 Update: படத்தில் நிச்சயம் LCU படம் தான்.. யார் யார் இருக்கிறார்கள்?