#sarthar2 #movie #karthikmovie #ezhumalai #cinema #todaynews

நடிகர் கார்த்தி நடிக்கும் படத்துக்கு உதவியாக இருந்த சண்டைப் பயிற்சியாளர் 20 அடி உயரத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார். இது அவரது குடும்பத்தினரையும், படக்குழுவினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் கார்த்தி, பயிற்சியாளரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்

Watch Youtube: https://youtu.be/DB18A4PpTXU?si=Zc3r__GV7lOit5Pu

கடந்த ஆண்டு தீபாவளிக்கு நடிகர் கார்த்தி நடிப்பில் சர்தார் என்ற படம் வெளியானது. தண்ணீர் மாஃபியாவைப் பற்றிய படத்தில் கார்த்தி இரண்டு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

 இப்படம் பலராலும் விரும்பப்பட்டு ரூ.100 கோடி வசூல் செய்து வசூலை ஈட்டியது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு, வரும் 15-ம் தேதி சென்னையில் படப்பிடிப்பை தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த 15ம் தேதி வேகமாக தொடங்கியது. சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் படப்பிடிப்பின் போது சண்டைக் காட்சிகளுக்கு உதவிய ஏழுமலை என்பவர் உயரத்தில் இருந்து விழுந்து காயம் அடைந்தார். படக்குழுவினர் காயம் அடைந்த நபரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


உயரமான இடத்தில் இருந்து விழுந்ததில் நெஞ்சில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 16ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.


பிரின்ஸ் பிக்சர்ஸ் என்ற திரைப்பட நிறுவனம், ஜூலை 16-ம் தேதி ஸ்டண்ட் காட்சியின் போது, ​​ஏழுமலை என்ற ஸ்டண்ட் கலைஞர் உயரமான இடத்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தார். அவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அதிகப்படியான ரத்தக்கசிவு ஏற்பட்டதால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இதனால் சர்தார் 2 படக்குழுவினர் அனைவரும் மிகவும் வருத்தத்தில் உள்ளனர் மேலும் அவரது குடும்பத்திற்கு ஆதரவாக இருப்பார்கள்.


இந்நிலையில், நடிகர் கார்த்தி ஏழுமலையின் வீட்டிற்குச் சென்று ஏழுமலையின் உடலுக்கு தனது இறுதி மரியாதையைச் செலுத்தினார். இதுமட்டும் இல்லாமல் ஏழுமலையின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தனது படத்தில் பணியாற்ற வந்த ஏழுமலை படப்பிடிப்புத் தளத்தில் உயிரிழந்தது என்பது கார்த்தியை மிகவும் பாதித்துள்ளது. இதனால் பெரும் சோகத்துடனும் வாடிய முகத்துடனும் ஏழுமலையின் குடும்பத்தினரைச் சந்தித்தார் கார்த்தி. இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் உலா வருகின்றது.


மேலும் படிக்க :  

கவின் நடிப்பில் கிஸ் படம்: தீபாவளி கொண்டாட்டம்