தமிழ் சினிமா நடிகர் விஜய் காதலுக்கு மரியாதை இசையமைப்பாளர்கள் தென்னிந்திய சினிமா மியூசிக்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர். ஆரம்பகால சினிமாவில் காதல் படங்களில் நடித்து தனக்கான குடும்ப ஆடியன்ஸை கட்டமைத்த விஜய் பின்னர் ஆக்ஷன் திரைப்படங்களைத் நடிக்க தொடங்கினர்.

 அது இளைஞர்களிடையே பிரபலமாக்கியது. அவர் அரசியல் கருத்துக்களைப் பற்றிய திரைப்படங்களையும் நடிக்க தொடங்கினார், இது அவரை அரசியலில் எதிர்காலத்திற்குத் தயார்படுத்த உதவியது.

இவர் தனது ரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தை மாற்றி தமிழ்நாடு வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தமிழகத்தில் தொடங்கி உள்ளார்  மேலும் தான் தற்போது ஒப்புக்கொண்ட படங்களில் மட்டும் நடித்துவிட்டு அதன்பின்னர், முழுநேர அரசியலில் களமிறங்கப்போவதாக விஜய் தெரிவித்தது, திரையுலகில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


விஜய்யின் ஆரம்பகால காதல் திரைப்படங்களில்   காதலுக்கு மரியாதை  எப்போதும் தனி இடம் உண்டு. 

ஃபகத் ஃபாசிலின் தந்தையான ஃபாசில், 1997ல்  இந்த படத்தை இயக்கினார். அந்த படத்தில் விஜய், ஷாலினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இளையராஜா  திரைப்படத்திற்கு இசையமைத்தார்  பாடல்கள் மிகவும் பிரபலமாகி, திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் இப்போது வெளிவந்துள்ளது. 

பிரபலமான தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்   சிற்பி தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தனது   சினிமா   அனுபவங்களை  குறித்த சில அருமையான தகவல்களை பகிர்ந்துள்ளார்

காதலுக்கு மரியாதை  திரைப்படம் 1997 ஆம் ஆண்டு மலையாளத்தில் முதலில் வெளிவந்து பின்னர் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. 

மலையாளப் பதிப்பிற்கு அணியாதி பிரவு என்று பெயரிடப்பட்டது மற்றும் அசேப்பச்சன் இசையமைத்திருந்தார், தமிழ் பதிப்பிற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். தெலுங்கு பதிப்பிற்கு  சிற்பி  நான்  இசையமைக்க, இந்தி பதிப்பிற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த தகவல் வீடியோவாக ஆன்லைனில் பகிரப்படுகிறது.

மேலும் படிக்க :

மாணவர்களுடன் விஜய் | தளபதி விஜய் கல்வி விருது விழா | தமிழக வெற்றிக் கழகம்