பல தமிழ் படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கும் நிலையில் முன்னணி நடிகர்கள் நடித்த வெற்றிப்படங்கள் மீண்டும் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மறு வெளியீட்டிற்காக காத்திருக்கும் படங்கள் இதோ:
நாயகன்: மணிரத்னம் இயக்கிய கமலின் நாயகன், கடந்த ஆண்டு கமல் பிறந்தநாளில் டிஜிட்டல் முறையில் மேம்படுத்தப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு கமலின் பிறந்தநாளுக்கு மீண்டும் வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.
மின்சார கனவு : ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் இப்படம் மீண்டும் வெளியாகியுள்ளது. பிரபுதேவா, அரவிந்த்சாமி, கஜோல் நடித்துள்ளனர். இந்தப் படம் முக்கோணக் காதலைச் சுற்றி வருகிறது.
இன்றும் கூட, ரசிகர்கள் படத்தின் பாடலை மேடையில் பாடி, அதை மீண்டும் திரையில் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
கில்லி படத்திற்கு பிறகு விஜய்யின் இரண்டு படங்கள் வெளியாகவுள்ளது
சச்சின்: விஜய் நடிப்பில் சமீபத்தில் தமிழகத்தில் வெளியான கில்லி திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றது.
அதையடுத்து, சச்சினின் வெற்றிப் படம் விஜய்யின் பிறந்தநாளில் மீண்டும் வெளியாகிறது.
குஷி: எஸ்.ஜே.சூர்யா, விஜய், ஜோதிகா இயக்கத்தில் 2000ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது குஷி.
இதில் சொல்லிக் கொள்ளும்படி கதை எதுவும் இல்லை, ஆனாலும் விஜய் நடிப்பிற்காகவே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த குஷி திரைப்படத்தை, விஜய்யின் பிறந்த நாளுக்கு ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர் படக் குழுவினர்.
பருத்திவீரன்: கார்த்தியின் முதல் படம் 2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கிய பருத்திவீரன். படத்தை மீண்டும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
கதை மற்றும் விஷுவல் எஃபெக்ட் காரணமாக இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. பல பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் அமீருக்கு மீண்டும் பருத்திவீரன் படம் ஆறுதல் அளிக்கும் என நம்பப்படுகிறது.
0 கருத்துகள்